சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சுயஉதவிக் குழுக் கூட்டம் இன்று(14) தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் உரையாற்றும் போது பிரதேச ரீதியாக உள்ள குழுக்கள் வலுவான நிலையில் இருந்தால் மாத்திரமே, தங்களுக்குரிய உதவிகளை தனி ஒருவராக கேட்பதை விட ஒரு குழுவாக இணைந்து கேட்பதன் மூலம் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும் என கூறினார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் த. பிரணவனால் திருகோணமலை மாவட்டத்தில் பகல் நேர பராமரிப்பு நிலையத்திற்கு 6 மாதம் முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட உள்ளதால் இவர்களை சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக புனர்வாழ்வு திட்டத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் இவ்வாறு புனர்வாழ்வு திட்டத்திற்கு உட்படும் மாற்றுத்திறனாளிகள், வைத்தியர் குழு மூலம் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார்.
இத்துடன் 12 கிராம உத்தியோத்தர் பிரிவுக்கும் புனர்வாழ்வு திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அமைவாக 12 பொருத்தமான மாற்றுத்திறனாளிகள் தெரிவு செய்யப்பட்டதுடன் இதற்கான அடிப்படையான விளக்கமும் அளிக்கப்பட்டது.
இதன்போது மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் த.பிரணவன், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.


