இலங்கை விமானப்படைக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கல் மற்றும் கெடெட் அதிகாரிகளை விமானப்படை அதிகாரிகளாக நியமிப்பது தொடர்பில் இன்று(18) காலை சீனக்குடா விமானப் படைக் கல்விப்பீடத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது ‘சுரகிமு லகபர’ என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கையின் நீல வானத்தைப் பாதுகாக்கும் இலங்கை விமானப்படையின் 03வது சமுத்திர படைப்பிரிவு, தாய்நாட்டைப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக மேற்கொண்டுவரும் உயர்ந்த சேவை, செயல்பாட்டுச் சிறப்பு மற்றும் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டும் வகையில், ஜனாதிபதி வர்ண விருது வழங்கப்பட்டன.
இலங்கை வான்வெளியைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் இலங்கை விமானப்படையின் உறுப்பினர்களாக விமானப்படையில் இணைந்த 66வது, 67வது மற்றும் 68வது கெடெட் அதிகாரி பாடநெறியை பூர்த்தி செய்த அதிகாரிகளை விமானப் படை அதிகாரிகளாக நியமித்தல் மற்றும் 103வது இலக்க பறக்கும் கெடெட் அதிகாரி பாடநெறியை நிறைவு செய்த அதிகாரிகளுக்கு பறக்கும் அதிகாரி சின்னம் அணிவித்தல் என்பன முப்படைத்தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டது.
பாடநெறியில் அதிவிசேடமான திறமைகளை வெளிப்படுத்திய கெடெட் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் விசேட விருதுகள் வழங்கப்பட்டன.


