கிளிநொச்சி மாவட்ட விவாதிகள் கழகத்தின் அங்குரார்ப்பண விழா இன்று(19) பிற்பகல் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட விவாதிகள் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அமரசிங்கம் கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.
கௌரவ விருந்தினர்களாக வடக்கு வலய தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர் கலைச்செல்வி ஞானசேகரன், கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி அதிபர் தனபாலசிங்கம் லக்சன், சட்டத்தரணி தீபச்செல்வன், மூத்த படைப்பாளி ஏழுமலைப் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பொது அமைப்பு சார்ந்தோர், பாடசாலை முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


