இந்திய அமைதிப் படையின் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் அஞ்சலி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படையின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.

 

யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் வைத்தியசாலை சமூகத்தினர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

இதன்போது உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

 

1987ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய அமைதிப்படையினரின் தாக்குதலில் வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.

 

மேலும் குறித்த சம்பவத்தில் 1987ம் ஆண்டு உயிர்நீத்த சாரதி வை.சண்முகலிங்கத்தின் நினைவாக அவரது மனைவி, செல்வன் ரா.சுகுமாரின் தாயாருக்கு சக்கர நாற்காலி ஒன்றினை நன்கொடையாக வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *