சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம்; தேரர் எச்சரிக்கை

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால், சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக, மல்வத்து விஹாரையின் பீடாதிபதி திபட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் வழியாக போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்க, மல்வத்தை மகா விஹாரைக்கு சென்றிருந்தபோது பீடாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நாட்டில் தற்போது அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதாகவும், இவை ஏதேனும் காரணத்திற்காக சமூகத்திற்குள் நுழைந்தால், பெரும் பேரழிவு வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படும் அதேநேரம், அவற்றை இலங்கைக்குக் கொண்டுவருவதைக் கட்டுப்படுத்த அந்தந்த நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என மல்வத்து விஹாரையின் பீடாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *