பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் சமயத்தினூடாக சமூகத்தை வளர்ப்போம் என்ற தொனிப்பொருளுக்கமைவாக பாலீஸ்வரர் ஆலயத்தின் மகளிர் அணியின் பணிகள் நேற்று(24) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பாலாம்பிகா மகளிர் அணியின் முதலாவது நிகழ்வாக கடலோரக்கந்தன் பாசிக்குடா முனை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இடம்பெற்று வருகின்ற கந்தசஷ்டி விரதத்தினை முன்னிட்டு ஆலயத்தின் வெளிவீதி மற்றும் உள்வீதி வளாகங்களை சிரமதானம் செய்து மற்றும் ஆலயத்தில் விரதம் அனுஷ்டிக்கும் அடியவர்களின் நலன் கருதி கூடாரம் ஒன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

