யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் இன்று(25) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் உடனடியாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விபத்து குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 2025-10-25