கிளிநொச்சியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது 

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து பொதிகளில் பொதி செய்யப்பட்ட கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி  தங்கி இருந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக கொழும்பிலிருந்து வருகை தந்த குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் இருந்து மேற்படி கஞ்சா பொதி மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் சான்றுப்பொருட்களும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக  ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *