கிளிநொச்சியில் 44 பேருக்கு நன்னீர் மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு

வடமாகாண விவசாயம் மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி மூலம்  9.91மில்லியன் ரூபா  நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

 

அதன் முதற்கட்டமாக கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 44 பேருக்கு  நன்னீர் மீன்பிடி வலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

 

வலையின் பெறுமதியில் மீனவர்கள் 50வீதத்திற்கான பணத்தை செலுத்துவதுடன் 50வீதம் மானியமாக வழங்கப்படுகின்றது.

 

மீன் பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு இன்று(25) காலை  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீன் பிடி அலகின் பணிப்பாளர்  அருளானந்தம் சீராளன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்து கொண்டு மீன் பிடி வலைகளை மீனவர்களுக்கு வழங்கி வைத்தார்.

 

குறித்த நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவசிறீ, கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *