கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது. இதன்போதே அந்த அதிகாரி மது போதையில் இருந்தமை அவதானிக்கப்பட்ட நிலையிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

