ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டுவந்த வீடு ஒன்றை நேற்று(26) முற்றுகையிட்ட பொலிஸார் பெண் வியாபாரி ஒருவரை 5350 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 3 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலையப் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவ தினத்தன்று பிற்பகல் குறித்த பிரதேசத்திலுள்ள ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள கலைமகள் பாடசாலை வீதியில் உள்ள போதைப்பொருள் விற்பனை செய்து வந்த வீட்டை பொலிஸார் முறையிட்டனர்.
இதன் போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 56 வயதுடைய பெண் வியாபாரியை 5350 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாவும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

