கைதான போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்வுக்கு அனுப்ப நடவடிக்கை

இம்முறை குறித்த சந்தேக நபரை கல்முனை நீதிமன்ற நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார் என்பதுடன் சந்தேக நபருக்கு எதிரான சகல ஆதாரங்களையும் அடுத்துவரும் தவணையில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

 

இச்சந்தேக நபர் கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சியின் வழிகாட்டலில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழு கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை பெரிய நீலாவணை பொலிஸ் பகுதியில் உள்ள மருதமுனை புறநகர் பகுதியில் போதைப்பொருளுடன் கைதான 32 வயதான மற்றுமொரு சந்தேக நபரை சிறைச்சாலை அத்தியட்சகரின் ஊடாக புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *