ஏறாவூர் நகரசபை பராமரிப்பின் கீழ் காணப்படும் பழைய சந்தை கட்டிடத் தொகுதி பூர்த்தியடைந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கையளிக்கப்படவிருந்தது.
எனினும், 14 வியாபாரிகளுக்கான கடைகள் போதாமை காரணமாக, ஏறாவூர் நகரசபை கிழக்கு மாகாணசபையின் நிதி உதவியை நாடியிருந்தது.
இதனால், கட்டிடத் தொகுதி கையளிப்பு நிகழ்வு சிலகாலம் பின்தள்ளப்பட்டது.
ஆனால், கிழக்குமாகாணசபை நிதி கிடைக்காத நிலையிலே, ஏறாவூர் நகரசபையின் மாதாந்த அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், நகரசபை நிதி மூலமாகவே 14 கடைகளுக்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது அந்தப் பணிகள் பூர்த்தி அடையும் நிலையிலும் உள்ளன.
“14 கடைகளும் பூர்த்தியடைந்தவுடன், வியாபார நடவடிக்கைகளுக்காக கடைத் தொகுதி விரைவில் வியாபாரிகளிடம் கையளிக்கப்படும்,” என
ஏறாவூர் நகரசபை தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம் தெரிவித்தார்.

