கிண்ணியாவில் நீரில் மிதந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

கிண்ணியா – ஈச்சந்தீவு பகுதியில் நீரில் மிதந்த நிலையில் நேற்று(08) ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம்(07) சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டுவந்த கும்பலை கடற்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

இதன்போது, தப்பிச்சென்ற ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆலங்கேணியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பின் போது சுமார் 2000 லீற்றர்களைக் கொண்ட வாளிகளையும், அதனைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கிண்ணியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *