கிளிநொச்சி மாவட்ட மட்ட விளையாட்டுப்போட்டியின் இறுதிப்போட்டி

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 35வது இளைஞர் விளையாட்டு விழாவின் கிளிநொச்சி மாவட்ட மட்ட விளையாட்டுப்போட்டியின் இறுதிப்போட்டி கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டுக் கட்டிடத்தொகுதியின் மைதானத்தில் நடைபெற்றது.

 

இந் நிகழ்வானது இளைஞர் கழகங்களின் கிளிநொச்சி மாவட்ட சம்மேளனத் தலைவர் நிலவரசன் தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க கலந்து கொண்டார்.

 

அத்துடனு குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனும் கலந்து கொண்டிருந்தார்.

 

மேலும் சிறப்பு விருந்தினராக மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் கலந்து கொண்டார்.

 

அத்துடன் இளைஞர் சேவைகள் மன்ற தலைவர் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, இளைஞர் சேவை மன்ற அதிகாரிகள் மற்றும் இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்.

 

போட்டியில்  மாவட்ட ரீதியில் வெற்றியீட்டியோருக்கு சான்றிதழ்களும் வெற்றி கேடயங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

 

இதில் யாழ்ப்பாண அணி 2:1என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

 

விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் முகமாக விளையாட்டுத் துறைக்காக மேலதிகமாக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *