அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் 110 கிராம் கேரள கஞ்சாவுடன் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவர் நேற்று(10) கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான சுனில் திசாநாயக்கவின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் ஆப்தீன் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகாஷ் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பிரபல கஞ்சா வியாபாரி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

