பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் வர்த்தகச் சந்தை

வட மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட “வர்த்தகச் சந்தை” நேற்று(10)க்ஷநடைபெற்றது.

 

தம்பகாமம் மாதிரிக்கிராமம் மற்றும் அயல் கிராமங்கள் இணைந்த குறித்த வர்த்தகச் சந்தையானது பளை தபால் கந்தோருக்கு அருகாமையில் பிரதேச செயலாளர் இ.த. ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

 

நிகழ்வின் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் க.சி கஜேந்திரனும், சிறப்பு விருந்தினராக வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் தொழிற்துறை மேம்பாட்டு அலுவலர் பொலின் பெனராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதில் 30 தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இச்சந்தையில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியதுடன் உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களையும் பெருமளவு கொள்வனவு செய்து சென்றதை அவதானிக்க முடிந்தது.

 

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் ப. இராமப்பிரியன், உதவி பிரதேச செயலாளர், இலங்கை நிர்வாக சேவை பயிலுநர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், பதவி நிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் செயலாளர், கமநல சேவைகள் நிலையத்தின் உத்தியோகத்தர், வர்த்தக சங்கத் தலைவர், கிளிநொச்சி மாவட்ட அலுவலர், தொழிற்துறை திணைக்களம் வட மாகாணம் மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை உத்தியோகத்தர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *