சித்தாண்டியில் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படும் பொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடங்களை சுற்றி வளைத்து தடுக்குமுமுகமாக சந்திவெளி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சித்தாண்டி, சந்தனமடு பகுதியை அண்மித்த இடங்களில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலில் சந்தேகத்திற்கிடமான 4 பேர் தப்பியோடியுள்ளதுடன் 2 பரல்களில் 80 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படும் 2 தகர பறல்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

 

சித்தாண்டி சமூகமட்ட இளைஞர்கள் மற்றும் சந்திவெளி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

 

குறித்த சுற்றிவளைப்பில் 2 மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய சந்தேக நபர்கள் 4 பேரும் மாவடிவேம்பு பகுதிகளைச்சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

 

தப்பியோடியவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கைப்பற்றப்பட்ட கசிப்பு மற்றும் பொருட்களை நீதிமன்றுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *