வாழைச்சேனை கல்குடா பட்டியடிச்சேனை அருள்மிகு ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்று வருகிறது.
கல்குடா பட்டியடிச்சேனை அருள்மிகு ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு இன்று(15) எண்ணெய்க்காப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் திரு.கி.கெங்கேஸ்வரன் அவர்களின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட சமயமும் சமூகமும் வளர்ப்போம் என்ற தொனிப்பொருளுக்கமைய மகளிர் அணியினரால் எண்ணெய்கள் அடியவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.




