திருகோணமலை தமிழ்ச்சங்கம் ஏற்பாட்டில் “இரு துருவங்கள்” கவிதை நூல் வெளியீடு

திருகோணமலைத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டிலும், அகரம் மக்கள் கலைக்கூடத்தின் அனுசரணையில், கவிச்சுடர் சிவரமணியின் “இரு துருவங்கள்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று(15) திருகோணமலை குளக்கோட்டம் ஒன்று கூடல் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
திருகோணமலை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திருமலை நவம் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். மாநகராட்சி மன்ற முதல்வர் (மேயர்) கந்தசாமி செல்வராசா முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் துரை மனோகரன் மற்றும் தினகரன்/தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
ஹாசிம் உமர் பவுண்டேசனின் இஸ்தாபகர், புரவலர் ஹாசிம் உமர் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு, நூலின் முதல் பிரதியைப் பெற்றார்.
திருகோணமலை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திருமலை நவம் மற்றும் முதன்மை, சிறப்பு அதிதிகளின் கருத்துரைகளும், கவிச்சுடர் சிவரமணியின் ஏற்புரையும் இடம்பெற்றது.
​ஹாசிம் உமர் பவுண்டேசனின் இஸ்தாபகர், புரவலர் ஹாசிம் உமரினால், திருகோணமலை தமிழ்ச்சங்கத்துக்கு ஒரு தொகுதி புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், ​திருகோணமலைத் தமிழ்ச்சங்கத்தினால் புரவலர் ஹாசிம் உமர்,​ மாநகராட்சி மன்ற முதல்வர் (மேயர்) கந்தசாமி செல்வராசா, பேராசிரியர் துரை மனோகரன் மற்றும் தினகரன்/தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர் ஆகியோர் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த இலக்கிய நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *