அம்பாறை, நிந்தவூர் முதலாம் குறுக்கு வீதியில், கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(15) இரவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து, 05 கிலோகிராம் 700 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 36 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

