திருகோணமலை – சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்றும் இன்றும் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.
சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இச் சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இச் சிரமதான நிகழ்வில் முன்னாள் போராளிகள், போராளிகளின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


