வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியிடம் அநாகரிகமாக செயற்பட்ட இளைஞன் கைது

கடந்த 10ஆம் மாதம் 25 ஆம் திகதியன்று பொத்துவில் அறுகம்பை குடாப்பகுதியில் இருந்து முச்சக்கரவண்டியில் மட்டக்களப்பு பாசிக்குடா நோக்கிச் சென்ற வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப்பிரயாணியிடம் திருக்கோவில் மற்றும் பொத்துவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பொத்துவில் பிரதானவீதியில் வைத்து ஒருநபர் அநாகரிகமாக செயற்பட்டு அவரை தவறான சம்பவத்திற்கு அழைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இச் சம்பவத்தில் சம்மந்தப்பட்ட சந்தேக நபரை திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்டப்பட மருதமுனை பகுதியில் வைத்து நேற்று(16) மாலை 06.45 மணியளவில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மாத்தளைப்பகுதியைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடிப்பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 23வயதுடைய இளைஞர் என ஆரம்பக்கட்ட விசாரனையில் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த கைது நடவடிக்கையானது கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபர் வருணஜெயசுந்தரவின் கட்டளைக்கு அமைவாக அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வெதமுல்லவின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப்குமாரவின் கண்காணிப்பில் பொத்துவில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் தயரெட்ணவின் மேற்பார்வையின் கீழ் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பிரதம பொலிஸ் பரிசோதகர் பீரிஸ் தலைமையிலான குழுவினராக பிஎஸ்44061உதயராஜ், பிஎஸ்73646 விஜயகுமார், பிஎஸ்6494 கஜந்தன், பிஎஸ் 40252சதுர்ஜன் மற்றும் பிஎஸ்டி 80447விஸ்வாத் ஆகியோரினால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது சம்பவ தினமான 10ஆம் மாதம் 25 ஆம் திகதியன்று அவர் அணிந்திருந்த, தலைக்கவசம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றபட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் நீதி மன்றில் ஆஜர்படுத்துவதற்காக மருத முனையில் இருந்து அழைத்துவரப்பட்டு பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *