கோறளைப்பற்று பிரதேச சபை வாழைச்சேனையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பேத்தாழை மீன்பிடி துறைமுகப் பகுதியில் மண் அரிப்பைத் தடுக்கும் முகமாக அணைக்கட்டு சுவர் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வானது பேத்தாழை மீனவர் சங்க அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன், உதவி தவிசாளர் நவநீதன், பிரதேச சபை உறுப்பினர் பிறை சூடி, தொழில்நுட்ப உத்தியோகத்தர், பேத்தாழை சன சமூக நிலைய தலைவர் மருதீபன் மற்றும் மீனவ சங்க அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேத்தாழை கல்குடா வட்டார உறுப்பினர் வெ.பிறைசூடியிடம் பிரதேச மீனவர்கள் முன்வைத்த கோரிக்கையினை அடுத்து தவிசாளரின் கவனத்திற்கு விடயம் தெரியப்படுத்தியதன் பிரகாரம் வட்டார நிதி ஒதுக்கீட்டின் மூலம் பிரதேச சபை நிதியிலிருந்து இவ் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

