ரி56 ரக துப்பாக்கி வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவுகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதி வீடு ஒன்றில் குசன் செய்யப்பட்ட கதிரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாக்கி 2 மகசீன்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் குழுவினர் 22ஆம் திகதி மாலை குறித்த துப்பாக்கியை எடுத்துச் சென்றுள்ளனர்.
மீட்கப்பட்ட துப்பாக்கி ஏதாவது குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுளாளன.
குறித்த துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த ஒருவர் 7 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளது.

