கொக்கட்டிச்சோலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவீரர் முதல் நாள் நினைவேந்தல்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர் வாரத்தின் முதல் நாள் மாவீரர் நினைவேந்தலும் மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு மிக எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சி உறுப்பினர்கள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர் கலந்து கொண்டு கண்ணீர்மல்க மாவீரர் கல்லறை உருவப் படத்திற்கு மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *