கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் விபத்தில் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட வந்தாறுமூலை பகுதியில் நேற்று(24) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மட்டக்களப்பில் இருந்து ஓட்டமாவடிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த போது எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதுண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து குறித்த உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏறாவூர் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *