மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மற்றும் குடும்ப கௌரவம் நேற்று(25) கிரான் வெஸ்லி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சமூக பற்றாளர் பாஸ்கரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள் மங்கள மேள வாத்திய இசையுடன் நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன் போது இறந்த உறவுகளுக்காக அக வணக்கம் செலுத்தப்பட்டு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வின் போது மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராஜா மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


