இன்று(26) அதிகாலை முதல் பெய்த இடைவிடாத பலத்த காற்றுடனான மழையினால் மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் உள்ள பார் வீதியில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்துள்ளதனால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
அதேவேளை கல்லடிப் பகுதியிலும் மரங்கள் முறிந்ததனால் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் உள்ள இருதயபுரம், கருவேப்பங்கேணி, மாமாங்கம், கூழாவடி, புதூர், சேத்துக்குடா மற்றும் கல்லடி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுவதுடன், பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதனால் மக்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


