பலத்த காற்றினால் 167 வீடுகள் பகுதியவில் சேதமடைந்துள்ளன.
கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான் – புலிபாய்ந்தகல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன், பிரதேச செயலகத்தினூடாக படகு சேவை ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி – மண்டூர் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன் பிரதேச செயலகத்தினூடாக உழவு இயந்திரம் மற்றும் லொறி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் வவுணதீவு வலையறவு பாலத்தினூடான வெள்ள நீர் பெருக்கெடுத்தோடுவதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அவசர போக்குவரத்திற்கான படகுசேவைகள் பிரதேச செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவானது அவசர அனர்த்த செயற்பாடுகளுக்காக நேற்று (26) முதல் 24 மணி நேர சேவையில் இயங்குகின்றது. அவசர தொடர்புகளுக்கு 065-2227701 அல்லது 117 இலக்கத்தினை தொடர்பு கொள்ள முடியும்.

