வாழைச்சேனையில் மரம் வீழ்ந்ததில் சட்டத்தரணிகளின் அலுவலகம் மற்றும் கடைகள் சேதம்

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக காற்றுடன் கூடிய மழையினால் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றம் வாழைச்சேனை வளாகத்தில் நீர் நிரம்பி காணப்படுவதுடன் அங்கிருந்த மரங்கள் சில முறிந்து விழுந்துள்ளன இதனால் அருகில் உள்ள சட்டத்தரணிகளின் அலுவலகம் மற்றும் கடைகள் சில சேதமடைந்துள்ளன.

அவற்றினை அகற்றும் நடவடிக்கையில் நீதிமன்ற நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

நீதிமன்ற அலுவலக செயற்பாடுகள் மாறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும்

மரங்கள் முறிந்து விழுந்து அங்கிருந்த கட்டிடத்தை சேதப்படுத்தியுள்ளது.

அவற்றினை அகற்றும் பணியில் பிரதேச சபையும் பிரதேச இளைஞர்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .

பல இடங்களில் மின்சார கம்பிகள் அறுந்து காணப்படுவதினால் மின்தடை ஏற்பட்டுள்ளது இதனால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *