பகிடிவதை தொடர்பான புகார்களைப் பெறுவதற்காக ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த நடவடிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை துணை அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த அதிகாரிகள் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவின் கீழ் நியமிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய கவலைகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் உயர் மட்ட கலந்துரையாடலுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இக் கூட்டம் அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.