அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னமுகத்துவாரம் பாலத்தில் விபத்து விபத்துக்குள்ளான நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தானது அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில் நோக்கி சென்ற Sp_ BEW3174 மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் அதே பாதையால் சென்ற இலங்கை கடற்படையினரின் கப் ரக வாகத்தில் பின்புறத்தில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்துக்குள்ளாகிய நபருக்கு முதல் உதவி கடற்படை வீரர்களினால் வழங்கப்பட்டது. அது பயனளிக்காததால் விபத்தில் காயமடைந்தவரை கடற்படை வீரர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலைக்கு அவர்களின் வாகனத்தில் கொண்டு சென்றனர்.

