மட்டக்களப்பு மாநகர சபையினால் மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் சில இடங்களில் வெள்ளநிவாரணத்திற்கு உதவுவதற்கான பொருட்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த சிறுமி தான் தன்னுடைய தேவையொன்றினை தன்னுடைய சேமிப்பின் ஊடாக நிறைவேற்றத் திட்டமிட்டு சேமித்த பணத்தை மாநகர முதல்வரிடம் ஒப்படைத்ததன் ஊடாக அனைவரது மனங்களிலும் இடம்பிடித்துள்ளார்.
இவ்வாறான பண்புடைய அனைவரது மனங்களிலும் இடம் பிடிக்குமளவிற்கு செயற்பட்டுள்ள சிறுமியின் உயரிய பண்பையும், நற்பண்புமிக்க பிள்ளையாக வளர்த்த அவரது பொற்றோரையும் அனைவரும் பாராட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

