மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் மனிதநேய நிவாரணப் பணி

மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினால் மனிதநேய நிவாரண பணி நேற்று முன்தினம்(03) மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவருமாகிய தேசபந்து முத்துக்குமார் செல்வராசா தலைமையில் குறித்த நிவாரணப்பணி முன்னெடுக்கப்பட்டது.

மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் சத்தியானந்தியிடம் கையளிக்கப்பட்ட சுமார் 3 இலட்சம் பெறுமதியான 60 நிவாரணப் பொதிகள் பிரதேச செயலகத்தில் வைத்து வெள்ள அனர்த்தத்தினால் தொழில் பாதிப்பிற்குள்ளான பெண் தலைமை தாங்கும் குடும்பங்களிற்கும், தெரிவு செய்யப்பட்ட தகுதியான சில குடும்பங்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினால் மனித நேயப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த நிதியின் மூலமாக குறித்த மனிதநேயப் பணி மேற்கொள்ளப்பட்டதுடன், குறித்த மனிதாபிமானப் பணியினை சம்மேளனத்தின் செயலாளர், பொறியியலாளர் அன்ரன்  உள்ளிட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்களும் இணைந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *