களுவாஞ்சிகுடி மெக்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன் நாடு முழுவதும் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கை கடந்த இரண்டு நாட்களாக மக்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிலையில் பொதுமக்கள் மற்றும் கழக உறுப்பினர்களின் பங்களிப்பின் மூலம் சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் என கேகரிக்கப்பட்டு பதுளை மாவட்டத்தின் லுணுகல பிரதேச செயலாளரிடம் நேரடியாகச் சென்று நேற்று(04) மடுல்சீமையில் வைத்து கையளிக்கப்பட்டது.
அத்துடன் மடுல்சீமை தமிழ் மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதோடு சிறார்களின் உளவியலை சீர் செய்யும் பொருட்டு பல்வேறு மகிழ்வூட்டும் நிகழ்வுகளை நடாத்தியமையும் குறிப்பிடத்தக்கது.


