மட்டு மாநகர சபை உறுப்பினர்கள் நிவாரணத்திற்காக தமது கொடுப்பனவுத் தொகையை வழங்கி வைத்தனர்

மாநகர சபையினரால் அனர்த்தத்திற்காக நிவாரணப் பொருட்களை சேகரிக்கின்ற நிகழ்வு நடைபெற்று இருக்கின்ற இந்த வேளையிலே இதற்கு மேலும் வலுசேர்க்கும் முகமாக எமது மாநகர சபையின் உறுப்பினர்கள் அதாவது எந்தவித அரசியல் வேறுபாடுகளும் இன்றி இந்த உறுப்பினர்கள் டிசம்பர் மாதத்திற்கான அவர்களது கொடுப்பனவுத் தொகையான 5 இலட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாவை வழங்கி இந்த மக்களுக்காக நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக அந்த பணத்தை எங்களிடம் வழங்கி இருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.

அதேபோன்று மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் 1 இலட்சத்து அறுபது ஆயிரம் ரூபாயை சேகரித்து தந்திருக்கிறார்கள்.

இதேபோன்று நாங்கள் இந்தப் பணியை மேற்கொள்வதற்கு மட்டக்களப்பு மாநகர சபை தான் முதன் முதலாக இந்த நிலையை வெளிப்படுத்தியது.

அதாவது உறுப்பினர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் இந்தப் பணத்தை வழங்குவதாக வெளிப்படுத்தியது எங்களுடைய மாநகர சபை தான் முதன் முதலாக வெளிப்படுத்தி இருந்தது.

இது உண்மையிலேயே இந்த மக்களுக்கு இந்தப் பணியை செய்ய வேண்டும் என்கின்ற வகையில் அந்த மனிதாபிமான அடிப்படையில் இந்த உறுப்பினர்களும் எமது உத்தியோகத்தர்களும் இதனை வழங்கி இருக்கின்றார்கள்.

விசேடமாக இவர்களுக்கு மாநகர சபையின் முதல்வர் என்ற வகையிலே அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *