மாவட்டத்தின் ஏற்றுமதி துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர் ஏ.பிரபு ஏற்பாட்டில் கொழும்பு மிற்சிற்டி ரொட்டரி கழகத்தின் அனுசரணையில் இப் பயிற்சி நெறி இடம்பெற்றன.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளும் போது தனித்துவமான பொதியிடல் முறைமையினைப் பயன்படுத்தும் போது சிறந்த சந்தை வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடிகின்றது.
இந் நிகழ்வின் வளவாளர்களாக இலங்கை பொதியிடல் நிறுவகத்தின் தலைவர் நிசாந்த பெரேரா, உப தலைவர் உபுல் அபேவிக்ரம மேற்கொண்டனர்.
ஏற்றுமதி தொழில்துறையின் முக்கிய பங்கான பொதியிடல் மூலம் விற்பனை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்குத் தேவையான ஆலோசனைகள் இதன் போது வழங்கப்பட்டன.
பொருட்களின் சேதங்களை தவிர்ப்பதற்கான பொதியிடலின் நுட்பங்கள் தொடர்பான ஆலேசனைகள் இதன் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் ஏற்றுமதி அபிவிருத்திசபையின் உத்தியோகத்தர்கள், தேசிய அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், சிறு தொழில் முயற்சி அபிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்திசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


