இது பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். உலகளாவிய தெரிவுநிலை, ஆராய்ச்சி திறமை, திறந்த அணுகல் மற்றும் மொத்த கல்வித் திறன் ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றமே இந்த உயர்வின் பின்னணி.
இலங்கை மற்றும் உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைச் சூழல்
இலங்கையில் பல்கலைக்கழகங்களின் போட்டி அதிகரித்து வரும் நிலையில், வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையில் கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், களனிப் பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் போன்றவை முன்னணியில் உள்ளன. இத்தகைய கல்வி போட்டி சூழலில் கிழக்குப் பல்கலைக்கழகம் 7வது இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனை.
உலகளாவிய ரீதியாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐரி), ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் போன்ற உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து முதலிடங்களில் நிலைத்து வருகின்றன.
2022 இலிருந்து 2025 வரை – ஒரு முன்னேற்றப் பயணம்
இந்த சாதனை ஒரு நாளில் ஏற்பட்டது அல்ல. கடந்த சில ஆண்டுகளில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் செயல்திறனையும், அக்கடமிக் தாக்கத்தையும் திரும்பப் பார்க்க வேண்டிய தருணம் இது.
2022 ஆம் ஆண்டில், கிழக்கு பல்கலைக்கழகம் தேசிய அளவில் 12வது இடத்திலும், உலக தரவரிசையில் 5210வது இடத்திலும் இருந்தது.
மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய முன்னேற்றம், எமது அக்கடமிக் சமூகத்தின் சோர்வற்ற முயற்சிகளும் உயர்தர ஆராய்ச்சி வெளியீடுகளும் காரணமாகும்.

