ஜனாதிபதி எமக்கு கடவுளாகவே தெரிகின்றார் – பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்கள்

மண் சரிவினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாகவே சென்று புனரமைப்புப் பணிகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி தமக்கு கடவுளாகவே தெரிகின்றார் என பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஜனாதிபதிக்குநன்றி தெரிவித்தனர்.

தேர்தல் காலங்களில் மட்டுமின்றி அனர்த்த நிலைமைகளின் போதும் ஜனாதிபதியின் அரசாங்கம் சிறப்பாக வருவதாகவும் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி தமக்கு கடவுளாகவே தெரிவதாகவும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வெள்ள அனர்த்தங்களின் நிலைமை மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண செயற்பாடுகள் சம்பந்தமான கள விஜய ஒன்றினை தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொண்டு இருந்தார்.

அதன் போது பாதிக்கப்பட்டிருந்த மக்கள் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண பணிகள் மிகச் சிறப்பான முறையில் நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனை முன் நின்று நிவாரண பணிகளை முன்னெடுத்து வரும் அரசாங்கத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பின்தங்கிய கிராம மக்கள் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *