மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு மக்களுக்கான மனிதாபிமான நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு புவிச்சரிதவியில் அளவை சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் சி. கே. பண்டார தலைமையில் இடம்பெற்றது
பின்தங்கிய பிரதேசமான இப்பகுதி மக்களுக்கான நிவாரணப்பொருட்களை மாவட்ட கணிய பொருள் அகழ்வு அனுமதிப்பத்திர உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் 33 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் இங்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை இங்கு வழங்கி வைத்தார்.
எதிர்க்கட்சிகளால் வேண்டுமென்றே எமக்கு எதிரான கணிய மண் அகழ்வு பற்றிய பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சட்டவிரோத கணிய மண் அகழ்வாளர்களால் உரிய முறையில் அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. தற்போது பலர் வேலை வாய்ப்புகளை இழந்து காணப்படுகின்றனர். இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படுகின்ற வெள்ளப் பெருக்குக்கு இவ்வாறான செயற்பாடுகளும் காரணமாக அமைகின்றது.
இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அரசாங்கத்தினால் இதற்கான சரியா தீர்ப்பு எதிர்காலத்தில் காணப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இங்கு கருத்து தெரிவித்தார்.




