மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடற்றவர்களுக்கு வீடு வழங்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் தொடர்ச்சியான செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 107 பேருக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாகாண கட்டிடத் திணைக்கள வீடமைப்பு அலுவலகத்தில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் எஸ் ஜான்சன் தலைமையில் இடம்பெற்றது
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொண்டு காசோலைகளை வழங்கி வைத்தார்
இதன் போது 104 பயனாளிகளுக்கு 1லட்சம் ரூபாய் வீதமும் ஏனைய பயனாளிகளுக்கு கட்டம் கட்டமான நிதி உதவிகளும் இங்கு வழங்கி வைக்கப்பட்டது இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு மாகாண கட்டிடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கிழக்கு மாகாண விகடமைப்பு அதிகார சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

