எதிர்க்கட்சியினர் பாராட்டும் அளவுக்கு எமது சேவைகள் முன்னெடுக்கப்படுகிறது – கந்தசாமி பிரபு

எமது ஜனாதிபதி இரவு பகல் பாராமல் பாதிக்கப்பட்ட இடங்களை சென்று நேரடியாக பார்வையிட்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதை விட்டு இன்று எதிர்க்கட்சியினர் பாராட்டும் அளவுக்கு நமது சேவைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

 

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீட்டுத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் தெரிவித்தார்

 

எதிர்க்கட்சியினரால் பல குற்றச்சாட்டுகள் எமது அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட போதிலும் இன்று பல சர்வதேச நாடுகள் எமக்கு பாரிய உதவிகளை செய்து வருகின்றது. அவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டாலும் நாம் அதிலிருந்து மீண்டெழும் சக்தியை கொண்டுள்ளோம்.

 

எமது அரசாங்கம் சேதமடைந்த அத்தியாவசிய சேவைகளை துரிதமாக கட்டி எழுப்பி வருகின்றது. நமது மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *