மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கற்றல் உபகரணங்கள் சேகரிக்கும் நிகழ்வு

பேத்தாழை வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தின் அறநெறி பாடசாலையின் ஏற்பாட்டில் கோறளைப்பற்று அறநெறி பாடசாலை ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பிலும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் சேகரிக்கும் நிகழ்வு இன்றுடன் நிறைவுக்கு வந்தது.

கடந்த ஒரு வார காலமாக இவ் மக்கள் நலப் பணியானது முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இதன்போது பிரதேசத்தில் உள்ள தாராள மனம் கொண்டவர்கள் அன்பளிப்பாக கற்றல் உபரணங்களை ஆர்வத்துடன் வழங்கி வந்தனர். இவர்களது முன்மாதிரியான சமூக சேவையினை பிரதேசத்தின் புத்திஜீவிகள் பலரும் பாராட்டினர்.

அறநெறி பாடசாலை அதிபர் எஸ். கார்த்திபன், கலாசார உத்தியோகஸ்தர் பிருந்தாபன், ஆசிரியர்கள் மற்றம் மாணவர்கள் இவ் அறப்பணி சேவையினை இரவு பகலாக சிறப்புடன் மேற்கொண்டிருந்தனர்.

சேகரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் அனைத்தும் கோறளைப்பற்று அறநெறி பாடசாலை ஒன்றியத்தின் ஊடாக உரியவர்களுக்கு கையளிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *