மட்டக்களப்பு மாவட்ட புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக கே.எம்.யூ பிரதீப் கலுப்பகன பதவியேற்றுள்ளார்.
பிலிமத்தலாவையை பிறப்பிடமாக கொண்ட இவர் கண்டி தர்மராஜா தேசிய பாடசாலை பழைய மாணவராவார்.
1996 இல் சப் இன்ஸ்பெக்டர் ஆக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்த இவர் 30 வருட பொலிஸ் சேவையில் அனுபவமுடையவர்.
பொலிஸ் பரிசோதகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அத்தியட்சகர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகிய பதவி நிலையங்களில் இலங்கை பொலிஸ் சேவைக்காக தனது பணிகளை ஆற்றி வந்துள்ளார்.

