மட்டக்களப்பில் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை(06) இடம் பெறவுள்ள தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளும் வாக்குச் சீட்டுகளும் மாவட்டத்தின் பிரதான தேர்தல் மத்திய நிலையமான மட்டக்களப்பு இந்துக்கல்லூரி வளாகத்தில் இருந்து இன்று(05) காலை பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன

 

12 உள்ளூராட்சி சபைகளுக்காக இடம்பெறவுள்ள இந்த தேர்தலில் இம்முறை மாவட்டத்தில் 447 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

 

மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்காக 6000 அரச ஊழியர்களும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாெலிஸாரும் இம்முறை தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

மாவட்டத்தின் தேர்தல் வாக்குகளை எண்ணுவதற்காக 144 வட்டார வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *