வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன

நாளை(06) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் செல்லவுள்ள முதலாம் கட்ட பேரூந்துக்களில் – ஊர்காவற்றுறை வாக்களிப்பு நிலையத்திற்குச்செல்லும் முதலாவது பேரூந்து இன்று(05) காலை 08.18 மணிக்குச் சென்றது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன், பிரதித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன், தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் திரு. பொ. தயானந்தன், மேலதிக அரசாங்க அதிபரும் (காணி) நலனோம்பல் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.க.ஸ்ரீமோகனன் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஆகியோர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *