அம்பாறை மாவட்டம் மருதமுனை – கல்முனை இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று(22) மதியம் உயிரிழந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர்.
இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார் 3 அடி நீளமும் 25 தொடக்கம் 50 கிலோ கிராம் எடை கொண்டதாகும் என எனவும் காலநிலை காரணமாக ஆழ் கடலில் ஏற்பட்ட மாற்றத்தினால் கடலாமைகள் கரையொதுங்கி வருவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

