வாழைச்சேனையில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் நுவரெலியாவில் வழங்கி வைப்பு

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையினால் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்காக சேகரிக்கப்பட்ட பொருட்கள் நுவரெலியா மாவட்டத்தை சென்றடைந்து கொத்மலை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் ஹெல்பொட என்ற கிராம மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதனை அப்பகுதி பிரதேச செயலகத்தின் ஆலோசனைப்படி கிராம சேவகர் உட்பட பிரதேச சபை தவிசாளர் சு.சுதாகரன், உப தவிசாளர் கே.நவநீதன் பிரதேசபை செயலாளர் எஸ்.ராஜ்கீதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

குறித்த கிராமத்திற்கு இதுவரை நிவாரணப் பணிகள் சென்றடையவில்லை என தெரிவித்தமையை அடுத்து குறித்த கிராமத்தை நோக்கி சென்று இவ் மனிதநேய உதவியை கோறளைப்பற்று பிரதேச சபை மக்கள் சார்பில் வழங்கி வைத்தனர்.

நிவாரணத்தைப் பெற்றுக் கொண்ட மக்கள் தவிசாளருக்கும் பிரதேச மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.

மேற்படி கிராமத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்டு 200 இற்கும் மேற்பட்டோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 100 இற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்த நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *