விநாயகபுரம் பவள மல்லிகை முன்பள்ளியில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

கோறளைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட விநாயகபுரம் பவள மல்லிகை முன்பள்ளியினால் 31 ஆவது ஒளிவிழாவும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

பேத்தாழை குகநேசன் மண்டபத்தில் இடம்பெற்ற

குறித்த நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சுதாகரன் பிரதம அதிதியாகவும், பிரதேச சபை உறுப்பினர் யோகநாதன் முதன்மை அதிதியாகவும் மற்றும் சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹாரூன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

 

இதன்போது அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

 

மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள்

யாவும் ஆரம்பமானது.

 

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது.

 

பல்வேறு போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

 

அதிதிகள் கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *